தமிழகம்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு குறுந்தொழில் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நித்தியானந்தம் நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஒரு மாத மாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் நீரில் மூழ்கின.

இதனால், 750 கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், மூலப் பொருட்கள், மின் மோட்டார்கள், மின்சாதனப் பொருட்கள் சேத மடைந்துள்ளன. இதனால், 600 கோடி ரூபாய் மதிப்பிலான உற் பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஆகவே, பாதிக்கப்பட்ட குறுந் தொழில் நிறுவனங்களுக்கு உடன டியாக அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும். 5 லட்சம் ரூபாய் வரை உடனடிக் கடனாக எவ்வித நிபந்தனையும் இன்றி குறைந்த வட்டியில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தள்ளி வைக்கவேண்டும்

அரசு, விற்பனை வரி, கலால் வரி, சேவை வரி ஆகிய வற்றை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும். 2 மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT