சாத்தங்குப்பத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுகவினர். 
தமிழகம்

கேளம்பாக்கத்தில் திமுகவினர் பிரியாணி விநியோகம்

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி கேளம்பாக்கத்தை அடுத்த சாத்தங்குப்பத்தில் திமுக சார்பில் 500-க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் உணவுவழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் தலைமை வகித்தார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

இதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. முன்னதாக, அப்பகுதியில் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT