ராமநாதபுரத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, சாலையோரத்தில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்க்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை ஆகிய பகுதிகளில் ஊரடங்கை மீறி தேவையின்றி வாக னங்களில் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை ஆட் சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
அங்கிருந்த போலீஸாரிடம் ஊர டங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
கேணிக்கரை பகுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது சாலை யோரத்தில் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் சிரமப்பட்டு வருவதைப் பார்த்தார். அவரை உடனடியாக மீட்டு புத்தேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் செஞ்சோலை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறை அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார். உட னடியாக, ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மூதாட்டியை மீட்டு காப்பகத்துக்கு அழைத்துச் சென் றனர்.