மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.70 கோடி மதிப்பிலான மிகப் பிரம்மாண்டமான சர்வதேச தரத்திலான கருணாநிதி நினைவு நூலகத்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் - பூ மார்க்கெட் இடையே பிரதான சாலையில் உள்ள அரசு நிலத்தில் அமைக்க ஆய்வு நடக்கிறது. மேலும், மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கலாமா? என்ற ஆலோ சனையும் மேற்கொள்ளப்படுவ தாகக் கூறப்படுகிறது.
இந்த நூலகம் தென் மாவட்டங் களில் போட்டித் தேர்வுக்கு தயாரா கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. தெற்கு ஆசியா வில் உள்ள மிகப்பெரிய நூல கங்களில் ஒன்று சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூல கம். இந்த நூலகத்தை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளை சார்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. இந்த நூலகத்தை போல் சர்வதேச தரத்தில் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக முதல்வரின் அறிவிப்பு உள்ளது.
மதுரையில் சிம்மக்கல் மைய நூலகத்தை தவிர வேறெங்கும் பெரிய நூலகம் இல்லை. ஒரே நேரத்தில் 100 மாணவர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய நூலகம் இல்லாதது பெரும் குறையாகவே நீடிக்கிறது. உயர்கல்வி படிக்கும் ஆய்வு மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராவோர், சென்னையைப் போல் பல்துறை ஆய்வுநூல்கள், போட்டித்தேர்வு நூல்கள், வரலாற்று நூல்கள், அறிவுசார் நூல்கள் இருக்கும் நூல கம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் சென்னை நூற்றாண்டு நூலகம் போல் மதுரையிலும் நூலகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.
அதன்படி தென் மாவட்ட மாணவர்கள் நலன் கருதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் ரூ.70 கோடியில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டதால், விரைவில் நூலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் நிலையில், நூலகத்தை எங்கு அமைக்கலாம் என பள்ளி கல்வித் துறையும், மதுரை மாவட்ட நிர்வாகமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே அரசு இடத் தில் அமைக்க ஆலோசனை நடக்கி றது. மேலும் உலக தமிழ்ச் சங்க வளாகத்திலும் நூலகத்தை அமைக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த நூலகம் சர்வதேச தரத்தில் பல்துறை களைச் சேர்ந்த பல பிரிவுகளை கொண்டதாக நவீன டிஜிட்டல் வசதிகளோடு அமைய உள்ளது. ஆய்வு மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுவான நூல்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள் என தனித்தனி பிரிவுகளாக அமையவுள்ளது. ஒரே இடத்தில் அனைத்து தரப்பினருக்குமான பெரிய நூலகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரைக்கு பக்கத்தில் கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. அதற்கும் இந்த நூலகம் உதவியாக இருக்கும். முதல்வரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.