தமிழகம்

கரோனா காலத்தில் குடும்ப மருத்துவரின் பங்களிப்பு: இணையக் கருத்தரங்கு

செய்திப்பிரிவு

கோவிட் காலத்தில் குடும்ப மருத்துவரின் பங்களிப்பு குறித்து இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 5-ம் தேதி இணைய வழிக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பின் தலைவர் அ.மகாலிங்கம் கூறும்போது, ''பொதுமக்களுக்கும் மருத்துவத்துறை சார்ந்த நபர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகளை இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பத்மஸ்ரீ எஸ்.நடராஜன், மோகனூரைச் சேர்ந்த 10 ரூபாய் மருத்துவர் ஜனார்த்தனன், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் வெங்கடேஷ்குமார் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ரமணன் ஆகிய பிரபல மருத்துவர்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த அரிய நிகழ்வில் கூகுள் மீட் மூலம் இணைய முறையில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள் : 05.06.2021 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 4.45 மணி முதல் 6.30 மணி வரை

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள பொதுமக்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள், 97104 85295 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்'' என்று மகாலிங்கம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT