தமிழகம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிவாரண உதவி

செய்திப்பிரிவு

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக் கும் மக்களுக்கு நிவாரணப் பொருட் கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங் களில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சென்னை ஸ்ரீராம கிருஷ்ண மடம் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 18 ஆயிரத்து 730 பேருக்கு உணவு, 3 ஆயிரத்து 262 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

சிறப்புக் குழு

செங்கல்பட்டு ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், ராமகிருஷ்ண சேவா சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து வெள்ள நிவாரணப் பணிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றன. மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொருட் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சுவாமி நீலமாதவனந்தர் தலைமை யில் ஒரு சிறப்புக்குழு கடலூர் மாவட்டத்தின் உட்பகுதிகளில் வெள்ள சேதத்தை மதிப்பிட சென்றுள்ளது. சிறிய அளவில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங் கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் நேரடியாக மடத்துக்கு சென்று நிவாரணப் பொருட்களை பெற்றுச்செல்கின்றனர்.

SCROLL FOR NEXT