கோப்புப்படம் 
தமிழகம்

7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

`கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்வோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்’ என, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியர் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. கடந்த இரு மாதங்களில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மற்றும் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், அச்சக உரிமையாளர்கள், மந்திரம் ஓதுபவர்கள், மண்டப உரிமையாளர்கள் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.

மணமக்களின் வயதுச் சான்றை சரிபார்த்தபின், திருமணப் பத்திரிகையை அச்சக உரிமையாளர்கள் அச்சடிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், சைல்டு லைனை 1098, மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04652 278404 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 04652 278980 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

SCROLL FOR NEXT