தமிழகம்

அக்னி நட்சத்திரம் முடிந்தும் நெல்லையில் 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது

அ.அருள்தாசன்

திருநெல்வேலியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இன்று பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கவில்லை. அவ்வப்போது மழை பெய்ததால் பகல்நேர வெப்பநிலை பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை.

இதனால் மாவட்டத்தில் இவ்வாண்டு கோடையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது. அக்னிநட்சத்திர நாட்களிலும்கூட வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கவில்லை.

வெப்பசலனத்தாலும், அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் உரிவான புயல்களாலும் மாவட்டத்தில் பரவலாக மழை நீடித்தது. இதனால் நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருகியது. இதன் காரணமாகவும் வெப்பநிலை குறைவாகவே பதிவாகி வந்தது.

கடந்த 29-ம் தேதி அக்னிநட்சத்திரம் முடிவுக்கு வந்தநிலையில் இன்று திருநெல்வேலியில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்திருந்தது. அதேநேரத்தில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

SCROLL FOR NEXT