தமிழகம்

குரூப்-1 தேர்வு முடிவு 4 மாதத்தில் வெளியாகும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு 4 மாதங்களுக்குள் வெளி யிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் உறுதி அளித்ததையடுத்து அது தொடர்பான வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த 2006-ம் ஆண்டு பி.எஸ்சி., பி.எல். பட்டம் பெற்றேன். குரூப்-1 தேர்வு மூலம் 74 காலியிடத்தை நிரப்ப தேர்வு நடத்துவது குறித்த அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிட்டது. நவம்பர் 8-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. பொது வாக டி.என்.பி.எஸ்.சி. அதன் தேர்வு நடைமுறைகளை விரை வாக முடித்து உரிய நேரத்தில் தேர்வு முடிவை வெளியிடுவ தில்லை. மொத்த தேர்வு நடை முறைகளை முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிடுகிறது.

கடந்தமுறை, 2013-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2014 ஜனவரி 28-ம் தேதி வரை விண் ணப்பம் பெறப்பட்டது. ஜன.30-ம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. ஏப்.26-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இதற்கிடையே நாடாளு மன்ற பொதுத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஏப்ரல் 24-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதனால், ஏப்.26-ம் தேதியில் இருந்து ஜூலை 20-ம் தேதிக்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்தாண்டு ஜனவரி 30-ம் தேதிதான் தேர்வு முடிவு வெளி யிடப்பட்டது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை பெரிய அளவில் நடத்துகிறது. அதன் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை ஒரு மாதத் துக்குள் வெளியிடுகிறது.

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளின் லட்சக்கணக்கான விடைத்தாள்களைத் திருத்து வதற்கு அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட முடியும். வரும் மே மாதம் தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் முடிவடைவதால், அடுத்த ஆண்டு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம். அவ் வாறு தேர்தலை அறிவித்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிடும்.

அதன் பிறகு தேர்வு முடிவு களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டால், என்னைப் போன்ற வயதை ஒத்தவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். எனவே, நவம்பர் 8-ம் தேதி நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு களை விரைவாக வெளியிட வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு நவம்பர் 15-ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, குரூப்-1 தேர்வு முடிவுகளை ஒரு மாதத்துக்குள் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 4 மாதங்களுக்குள் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT