கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதியை தொடங்கிவைத்து பார்வையிட்ட அமைச்சர் அர.சக்கரபாணி. உடன், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் 400 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி: அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

கோவை கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் 400 படுக்கைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கர பாணி நேற்று தொடங்கிவைத்தார்.

கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் அளவு, வயது, மருத்துவரின் பரிந்துரைஅடிப்படையில் தற்காலிக சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனை களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் ஏ, இ, டி என மூன்று பெரியஅரங்குகளில் மொத்தம் 755 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மிதமான பாதிப்புள்ள கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு அரங்கத்திலும் சிகிச்சை அளிக்க ஏதுவாக 9 மருத்துவர்கள், 54 செவிலி யர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு கரோனா தொற்று தீவிரம் அடைந்து ஆக்சிஜன் தேவைப்படும்போது அருகில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பும் நிலை இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக ‘டி’ அரங்கில் 400 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று தொடங்கிவைத்தார்.

இம்மையத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர்களும் சுழற்சி முறையி ல் பணியாற்ற உள்ளனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, 12 மருத்துவர் களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கான பணி ஆணையையும் அமைச்சர் வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT