காய்ச்சல், உடல் வலி போன்ற கரோனா அறிகுறி இருந்து குணமடைந்தவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு தடுப்பூசி போடுவது நல்லது என பொது மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின் றன. இதில் தற்போது, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் 3 மாதங் களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கி டையே, காய்ச்சல், உடல் வலி, சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு அண்மையில் குண மடைந்தவர்கள், பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுக்க உரிய மருத்துவ ஆலோசனைக்கு பிறகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ரத்த உறைதல் பரிசோதனை
இதுகுறித்து சமூகம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வீ.சி.சுபாஷ்காந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தடுப்பூசி போட்டுக் கொள்வ தால் கரோனா தொற்றின் தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே தடுப்பூசி குறித்து அச்சம், அலட்சியம் வேண் டாம். அதேசமயம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.
காய்ச்சல், உடல் வலி, சுவை இழப்பு போன்ற கரோனா அறி குறிகள் இருந்தும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், சாதாரண காய்ச்சல் என நினைத்து வீட்டி லிருந்தே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டவர்கள்கூட அறியாமையால் தற்போது முகாம் களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதாக தெரிகிறது.
கரோனா தொற்று ஏற்பட்டவர் களுக்கு 3 வாரத்துக்கு ரத்தம் உறைதல் தன்மை இருக்கும் என்பதால், இதுபோன்று அறிகுறி இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அல்லது d-dimer என்ற ரத்தப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. அதேசமயம், அறியாமையால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பெரும்பாலானவர் களுக்கு ஒன்றும் ஆவதில்லை.
அதேபோல கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் கள், அதன்பின் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட பிறகு கரோனா தொற்று ஏற்பட்டாலும், குணமடைந்த பிறகு 3 மாதங்கள் கழித்து 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார்.
பிறருக்கு பரவுவதைத் தவிர்க்கலாம்
திருச்சியைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ஹக்கீம் கூறும்போது, ‘‘கரோனாவால் பாதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு உட்பட்டவர்களோ அல்லது ஏதாவது அறிகுறியுடன் இருப்பவர்களோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முகாம்க ளுக்கு நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மூலம், முகாமுக்கு வரக்கூடிய மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும், இருந்தி ருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே தடுப்பூசி செலுத்திக் கொள்வது சிறந்தது. இதன்மூலம் தேவையற்ற உடல்நல பாதிப்புகளை தவிர்க் கலாம்.
அதேபோல, தற்போது போடப் பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வெளிநாட்டு தடுப்பூசிகளுக்காக சிலர் காத்திருப்பது சரியல்ல. எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தாமதப்படுத்தக்கூடாது” என்றார்.
திருச்சியில் 3.05 லட்சம் பேருக்கு தடுப்பூசி
திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் எஸ்.ராம்கணேஷ் கூறும்போது, ‘‘திருச்சி மாவட்டத்தில் இதுவரை 3.05 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு வரக்கூடியவர்களிடம் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததா என கேட்டறிவதுடன், ஆக்சிஜன் அளவை பரிசோதித்த பிறகுதான் மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்துகின்றனர்’’ என்றனர்.