தமிழ்நாடு, புதுச்சேரியின் பால்வளத் துறை மேம்பாட்டுக்கு நபார்டுவங்கி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து நபார்டு வங்கியின்மண்டல தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச அளவில் பால்வளத் துறையின் மேம்பாட்டுக்காக 2001-ம் ஆண்டு முதல் ஜூன் 1-ம் தேதியை உலக பால் தினமாக கொண்டாடி வருகிறது. பால்பண்ணைத் தொழிலில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கால்நடை வளர்ப்பு பற்றியஆராய்ச்சிக்கான நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக சேலம் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் தொடர்பான ஒருங்கிணைந்த உயர்நிலை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவுவதற்கு நபார்டு வங்கி ரூ.416 கோடிநிதியுதவி வழங்கியுள்ளது. பால்வளத் துறையை மேம்படுத்த 50 பால் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி, ரூ.4.87 கோடிநிதியுதவி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால்உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) மூலம், 29 திட்டங்களுக்காக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.137.13 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சேலம், தஞ்சை, திருச்சி உள்ளிட்டபல்வேறு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையங்களுக்கு நபார்டு வங்கி ரூ.303 கோடி கடனுதவி வழங்கி உள்ளது.
பால் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 78 ஆயிரம்பேர் பயன்பெறும் வகையில்,நபார்டு வங்கி ரூ.1.36 கோடி மத்தியஅரசின் மானியத்தை வழங்கி உள்ளது. கடனுதவி, இலவச நிதியுதவி,மானியம் மூலம் தமிழகம், புதுச்சேரியின் பால்வளத் துறை மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.