தமிழகம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை நிராகரிப்பதா?- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அதிருப்தி

செய்திப்பிரிவு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக ஏப்.28-ல் நடந்தது. இதில் கரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி, கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரியை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப் படவில்லை.

2017 முதல் 2021 ஏப்ரல் வரைக்கான ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களைச் சமர்ப்பிக்க தாமதக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவில் வணிகம் செய்வோருக்கு உதவும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் வணிகத் துறையினர் இந்த ஆண்டு சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு ஜிஎஸ்டி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அபராதம் மற்றும் தாமதக் கட்டணம் இன்றி ஆக.31 வரை நீட்டிக்க வேண்டும்.

உள் நாட்டிலேயே தயாரிக்கப் படும் கரோனா சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது தொடர்பாக அமைத்துள்ள குழுவில் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமி ழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அசாதாரணமான சூழலில் அரசியல் சார்புகளுக்கு இடம் அளிக்காமல் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற ஒரே இலக்கை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.

SCROLL FOR NEXT