தமிழகம்

ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி: உறவினர் வீடுகளுக்குச் சென்றபோது விபரீதம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் அருகே இரு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி அருகே வள்ளி யூரில் எஸ்.கே. ஸ்போக்கன் இங்கிலீஸ் சென்டர் நடத்தி வந்தவர் சிவசுப்பிரமணியன்(40). இவரது மனைவி லிட்டில் ராஜம்(37). இவர்களது குழந் தைகள் அஞ்சலி(3), அஞ்சனா(2). இவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள உறவினர் டேவிட் என்பவரின் வீட்டுக்கு கிறிஸ்து மஸ் பண்டிகையைக் கொண்டாடு வதற்காக நேற்று காலை காரில் சென்றனர்.

திருப்பூரில் வியாபாரம் செய்து வருபவர் சுப்பிரமணி(68). இவரது மனைவி ருக்மணி(57). இவர்களது மகன் மணிகண்டன்(45), இவரது மனைவி ராதா(40). இவர்களது குழந்தைகள் மகாலட்சுமி(13), மகன் சபரீஷ்(3).

மணிகண்டனின் தங்கை வீட் டுக்கு கிறிஸ்துமஸ் விழா கொண் டாட இவர்கள் அனைவரும் சிவ காசி நோக்கி காரில் சென்றனர். இரு குடும்பத்தினர் வந்த கார் கள் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை கிராமத்தை கடந்த போது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில் சம்பவ இடத்திலேயே சிவசுப்பிரமணியன், சுப்பிரமணி, ருக்மணி, மணிகண்டன், ராதா ஆகியோர் உயிரிழந்தனர். லிட்டில் ராஜம், மகாலட்சுமி, சபரீஷ் ஆகி யோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அஞ்சலி, அஞ்சனா ஆகியோர் காயமின்றி தப்பினர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் மு.நாகேந்திரன், பழநி டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், டாக்டர் ஆசைத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அம்பிளிக்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளை அரவணைத்த போலீஸார்

விபத்து நடந்தவுடன் குழந்தைகள் அஞ்சலி, அஞ்சனா ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளித்தவுடன் இருவரும் மகளிர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தந்தை சிவசுப்பிரமணியன் இறந்தநிலையில், தாய் லிட்டில் ராஜமும் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருக்க குழந்தைகள் தயங்கினர். திருப்பூரில் இருந்து அவர்களது உறவினர் டேவிட் வந்துசேரும் வரை குழந்தைகளை தங்கள் பராமரிப்பில் மகளிர் போலீஸார் பார்த்துகொண்டனர். பின்னர் டேவிட் வந்ததும் அவரிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT