முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினமான டிசம்பர் 24-ம் தேதி, அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28- வது நினைவு தினமான டிசம்பர் 24-ம் தேதி, காலை 11 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதில், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இளைஞர், மாணவர், மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.