தமிழகம்

மின் கட்டணத்தில் சலுகை வழங்க நுகர்வோர் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்குநுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்டணத்தை செலுத்த அரசு அவகாசம் வழங்கி உள்ளது. அதுபோல், கட்டணத்திலும் சலுகை வழங்க வேண்டும். தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100யூனிட்டை 200 யூனிட்டாகஉயர்த்த வேண்டும். இதன்மூலம், மின்கட்டண சுமை சற்று குறையும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT