கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை நேற்று பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அருகில், அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர கோவைக்கு 50 கார் ஆம்புலன்ஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளை மருத்துவ மனைக்கு அழைத்து வர கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை சூலூர் அருகே காடம்பாடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கிராம அளவிலான கரோனா சிகிச்சைமையத்தை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்கு தனியார் பங்களிப்புடன் 240 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட வார்டை பார்வையிட்டார். பின்னர், அரசு கலைக்கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். தமிழக அரசின் ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட 200 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை கோவை அரசு மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவையில் அனைத்து துறைகளும் இணைந்து தொற்று பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து வர 50 கார்ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளன. தொற்று பாதிப்புஎண்ணிக்கை கவலை அளிக்கக்கூடிய தாக உள்ளதால் தளர்வுகளுடன் இயங்கிவரும் தொழிற்சாலைகள் கண்காணிக் கப்பட்டு வருகின்றன. நோய் தொற்றுவிதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலை கள் மூடப்படும்” என்றார்.

உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT