தமிழகம்

துப்புரவு பணிகளை தீவிரப்படுத்த சென்னையில் கூடுதலாக 1000 பணியாளர்கள்: பிற மாநகராட்சிகளில் இருந்து வரவழைப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் துப்புரவு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 1,139 துப்பு ரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கடந்த இரு நாட் களாக மழை குறைந்துள்ள நிலை யில், துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப் பணியில் மாநகராட்சி பணியாளர் கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியை தீவிரப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1,070 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1,139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பை லாரிகளும் வரவழைக் கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப் பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற் கான உணவு, 252 அம்மா உணவ கங்கள் மற்றும் 4 மைய சமையல் கூடங்களில் தயாரிக்கப்பட்டு வரு கிறது.

200 வார்டுகளிலும் 292 மருத் துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT