புதுவை காந்தி வீதி வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலில்உலக நன்மை, கரோனா தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்க வேண்டியும்நேற்று ருத்ராபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு கணபதி பூஜை, கோபூஜையுடன் ருத்ராபிஷேகம் தொடங்கியது. 8.30 மணியளவில் கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, யாக சாலைபூஜை, ருத்ராபிஷேகம் நடந்தது.மதியம் 12.45 மணியளவில் சாமிக்கு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜசேகரன், துணைத்தலைவர் ரவி, அறங்காவலர் குழுவினர் செய் திருந்தனர்.