நெய்வேலி மும்தாஜ் கொலை வழக்கு தொடர்பாக விசார ணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பி.என்.பாளையம் சுப்பிர மணியன் மரணம் குறித்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: “நெய் வேலி மும்தாஜ் கொலை வழக்கில், பண்ருட்டி வட்டம் பி.என்.பாளையம் சுப்பிரமணியை நெய்வேலி நகரிய போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்ததால் அவர் இறந்தார்.
இதுகுறித்து சுப்பிரமணியின் மனைவி ரேவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். நெல்லிக் குப்பம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இதை தொடர்ந்து 17.7.2015 அன்று இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் விசார ணை கிடப்பில் போடப்பட்டுள் ளது. ரேவதி நான்கு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. எனவே சிபிசிஐடி விசாரணையை துரிதப் படுத்திடவும், ரேவதிக்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.