ஆரணியில் சப்த கன்னிமார்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள புத்திர காமேட் டீஸ்வரர் கோயில் வளாகத்தில் சப்த கன்னிமார்கள் சிலை உள்ளது. மூலவரை தரிசனம் செய்யும் பக்தர்கள், கன்னிமார் களையும் வழிபடுகின்றனர்.
இந்நிலையில், கன்னிமார்கள் சிலை மூன்று துண்டுகளாக உடைக்கப்பட்டு, கோயில் வளாகம் அருகே உள்ள குப்பையில் வீசப்பட்டிருந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. அன்றைய தினம் காலையில் பூஜைகள் நடைபெற்ற போது நன்றாக இருந்த கன்னிமார்கள் சிலையை, மர்ம நபர்கள் பெயர்த்து வீசி உடைத்துள்ளனர்.
மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்படத்தின் கண்ணாடி களும் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவலறிந்த ஆரணி நகர காவல் துறையினர், கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகள் மூலம் விசா ரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.