காரைக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வாட்டில் ஆக்சிஜன் சிலிண்டரை பொறுத்திய தலைமை மருத்துவர் தர்மர். 
தமிழகம்

காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை கரோனா வார்டில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்திய தலைமை மருத்துவருக்கு பாராட்டு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வுக்குச் சென்ற தலைமை மருத்துவர் தர்மர், அங்கு கரோனா வார்டில் ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகும் நிலையில் இருந்ததைக் கவனித்து அவரே ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டுவந்து பொருத்தினார்.

இதையடுத்து அவரை நோயாளிகளின் உறவினர்கள் பாராட்டினர்.

காரைக்குடி புதிய மகப்பேறு கட்டிடத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அருகேயுள்ள பழைய கரோனா வார்டிற்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

ஆக்சிஜன் தீர்ந்ததும் மருத்துவப் பணியாளர்கள் சேமிப்பு அறையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை கழற்றி எடுத்துச் சென்று கரோனா வார்டுகளில் பொருத்துகின்றனர்.

இந்நிலையில் இன்று கரோனா வார்டிற்கு தலைமை மருத்துவர் தர்மர் ஆய்வுக்குச் சென்றார்.அப்போது ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகும் நிலையில் இருந்தது. ஆனால் அதை பொருத்துவதற்கான ஊழியர்கள் வேறு பணியில் இருந்தனர்.

இதையடுத்து தலைமை மருத்துவரே ஆக்சிஜன் சிலிண்டர்களை கழற்றி, கரோனா வார்டில் பொருத்தினார். தலைமை மருத்துவரின் இச்செயல்பாட்டை நோயாளிகளின் உறவினர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT