தென் மாவட்டங்களின் தேவை க்காக மூன்றாவது ஆக்சிஜன் ரயில் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்துக்கு வந்தது.
ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆக்சி ஜன் நிரப்பிய டேங்கர்கள் ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இத ன்படி தென்மாவட்டங்களின் தேவைக்காக ஆக்சிஜன் டேங்க ர்களுடன் 2 ரயில்கள் ஏற்கெனவே வந்துள்ளன. இந்நிலையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 5 டேங்கர்களில் 66.12 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் மூன்றாவது ரயில் நேற்று பிற்பகல் 1.10 மணிக்கு மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்துக்கு வந்தது.
பின்னர் அங்கிருந்து தேவை யான மாவட்டங்களுக்கு ஆக்சி ஜன் நிரப்பிய டேங்கர்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்துக்கு இது வரை ஆக்சிஜன் டேங்கர்களுடன் 24 ரயில்கள் வந்துள்ளன. இவ ற்றின் மூலம் 1393.71 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளன என்று மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.