மதுரையில் கோவேக்சின் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. முதல் டோஸ் செலுத்தியவர்கள் 42 நாட்களுக்குப் பின்பும் 2-வது டோஸ் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவி லான தடுப்பூசி இருப்பில் இல்லை.
இதனால், போலீஸார், அரசு ஊழியர்கள், தன்னார் வலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி செலுத்த ப்படுகிறது.
தமிழகத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் மட்டுமே பொது மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி வரத்து முற்றிலும் நின்று விட்டதால் இரண்டாவது டோஸ் போட வருகிறவர்களுக்குக் கூட தற்போது தடுப்பூசி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.எஸ். காலனி யை சேர்ந்த மகாலட்சுமி (65) கூறுகையில், கோவேக்சின் முதல் டோஸ் போட்டு 42 நாட்கள் கடந்து விட்டன. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக எஸ்.எஸ். காலனி அன்சாரி நகரில் உள்ள மையத்துக்குச் சென்றேன். ஆனால், அங்கு இருப்பில் இல்லை என்றும், ராஜாஜி அரசு மருத்துவம னைக்குச் செல்லும்படியும் கூறினர். நேற்று அங்கு சென்றேன். அந்த மருத்துவமனையிலும் கோவேக்சின் தடுப்பூசி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
சுகாதாரத் துறை இயக்குநர், ராஜாஜி மருத்துவமனை டீனிடம் முறையிட்டேன். அதற்கு, கோவேக்சின் இன்னும் வரவி ல்லை. வந்த பின்பு தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறினர். என்னைப் போல் கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட முதியவர்கள் பலர் தற்போது இரண்டாவது டோஸ் செலுத்து வதற்காக வீட்டுக்கும், அரசு மருத்துவமனைக்கும் தினமும் அலைந்து வருகிறோம் என்று கூறினார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இதுவரை மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 273 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 48,720 தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. கோவேக்சின் இன்னும் வரவில்லை என்று கூறினர்.