நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களை வெள்ளம் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
வரலாறு காணாத மழை வெள் ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் படிப்படியாக மீண்டு வருகிறது. தென் மாவட்டங்கள் மழை, வெள்ளம் மற்றும் சூறைக் காற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றன. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. எனவே, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை வெள்ளம் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
அங்கு சேதமடைந்த பயிர்களுக்கும், செங்கள் சூளைகளுக்கும், வீடுகளுக்கும் தமிழக அரசு உரிய இழப் பீடு வழங்க வேண்டும். அதுமட்டு மின்றி, பல மாதங்களாக வேலை யில்லாமல் வாடும் வேளாண் தொழிலாளர்களுக்கும், செங் கல் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.