தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைய நேரில் அழைப்பு

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணியின் தலைவர் சந்தித்து, தங்கள் அணியில் சேர அழைப்பு விடுத்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், கூட்டணி பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன. கடந்த தேர்தல்போல இந்த தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்வமுடன் உள்ளன. தேமுதிகவை தே.ஜ. கூட்டணியில் தக்கவைத்துக் கொள் வதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், விஜயகாந்தை சமீபத்தில் சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியினரும் விஜய காந்தை சந்தித்து தங்கள் அணியில் சேர அழைப்பு விடுத்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு சென்றனர். அங்கு, விஜயகாந்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர் பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறும்போது, “மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி விஜயகாந்தை சந்தித்து பேசினோம். எங்கள் கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புகிறோம். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம். தமாகாவுடனும் பேசுவோம்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் கூறும்போது, ‘‘ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையில், தமிழகத்தின் இன்றைய நிலை, கடந்த ஆட்சி யாளர்களின் அணுகுமுறை குறித்து பேசினோம். எங்களுக்கு நல்ல பதிலை சொல்வதாக விஜயகாந்த் கூறியுள்ளார்’’என்றார்.

பொதுக்குழுவுக்கு பின் முடிவு

தேமுதிக வட்டாரங்களில் கேட்ட போது, “தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. ஜனவரியில் பொதுக்குழுவை கூட்டிய பின்னர், கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்” என்றனர்.

SCROLL FOR NEXT