சென்னை மாவட்டத்தில் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் வெள்ள நிவாரணத் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட் டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாதிப் புக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் வெள் ளத்தால் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு முடிவடை யும் தருவாயில் உள்ளது. 10 தாலுகாக்களின் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு தொடர்பான விவ ரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலும், அண்ணா பல்கலைக்கழக கணினி மையங்களிலும் இரவு பகலாக (3 ஷிப்டுகள்) நடைபெற்று வருகின்றன.
அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரி வரை அனைத்து பணியாளர்களும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. வெள்ள நிவாரணத் தொகையை ஆன்லைன் மூலம் இந்த மாத இறுதிக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்திருப்பதாக பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.