தமிழகம்

தலைமைச் செயலகத்தில் அவசியப் பணிகளுக்கு மட்டுமே அலுவலர்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தலைமைச் செயலகத்தில் உள்ள துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகளைப் பொறுத்தவரை ஊரடங்கு காலம் முடியும் வரை துறை செயலர்கள் அளவிலேயே ஆய்வு செய்து தகுந்த முடிவுகள் எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி அவசியமாக தேவைப்படும் அலுவலர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். இணைநோய் உள்ள பணியாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். நோய்த்தொற்று தடுப்புக்கான உரிய முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT