சிவகங்கை கூட்டுறவு கிடங்கில் மண்ணெண்ணெய் வாங்க சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள். 
தமிழகம்

ஒரு நாள் மட்டுமே விநியோகம் என்ற அறிவிப்பால் சமூக இடைவெளியின்றி சிவகங்கையில் மண்ணெண்ணெய் வாங்க குவிந்த மக்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை கூட்டுறவு மண்ணெண்ணெய் கிடங்கில் ஒருநாள் மட்டுமே மண்ணெண்ணெய் விநி யோகிக்கப்படும் என அறிவிக்கப் பட்டதால் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் குவிந்தனர்.

சிவகங்கையில் வட்டாட்சியர் அலுவலகம், சுண்ணாம்பு காள வாசல் என 2 இடங்களில் கூட்டுறவுத்துறை சார்பில் மண் ணெண்ணெய் கிடங்குகள் செயல் படுகின்றன.

இதில் சுண்ணாம்பு காளவாசல் அருகேயுள்ள கிடங்கில் மட்டும், 2,700 குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது.

நேற்று, ஒருநாள் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகிக் கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 300-க்கும் மேற்பட்டோர் சமூக இடை வெளியின்றி கிடங்கில் குவிந்தனர்.

மேலும் அந்த கிடங்கில் மண்ணெண்ணெய் இறைக்கும் இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் கிடங்கு ஊழியர்கள் அடிகுழாயைப் பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெயை விநியோகம் செய்தனர். இதனால் விநி யோகம் செய்வதிலும் தாம தம் ஏற்பட்டதால் மக்கள் ்அதிருப்தி அடைந்தனர். மேலும் மக்கள் நீண்டநேரம் வெயிலில் காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்கிச் சென்றனர்.

கரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நிலையில் வார்டு வாரி யாக மண்ணெண்ணெய் விநி யோகித்தால், இதுபோன்று ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடு வது தவிர்க்கப்படுவதோடு, நீண்டநேரம் காத்திருக்கும் நிலையும் இருக்காது என மண் ணெண்ணெய் வாங்கக் காத்திருந்த மக்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT