மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேற்பு பெருகி வருவதால் மதிமுகவை சிதைப்பதற்கு திமுக முயற்சிகளை மேற்கொள்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதிமுக தொடங்கி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர் நலனுக்காக நானும் எனது தோழர்களும் தன்னலமின்றி போராடி வருகிறோம். இந்த சூழலில் மதிமுகவினரை திமுகவுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தது கேள்விப்பட்டு திமுகவுடன் இணைவது இல்லை என்று முடிவு செய்தேன். இந்த சூழலில்தான் மதிமுகவினர் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர்.
மதிமுகவிலிருந்து விலகிய அவர் களை நான் மிகவும் நேசித்தேன். ஆகையால், அவர்கள் என் மீது குறை கூறுவதற்காக நான் ஆத்திரப் படவில்லை. மக்கள் நலக் கூட் டணிக்கு ஆதரவுகள் பெருகி வரு வதால், மதிமுகவை சிதைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. எனக்கென்று ஒரு உலகம் இல்லை. எங்கள் இயக்கமும், தொண்டர் களும்தான் என் உலகம். கடுமை யான சோதனைகளைத் தாங்கி நெஞ்சுறுதியோடு பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.