இந்த முறை கொங்குமண்டலத்தில் எப்படியாவது வெற்றிக்கொடி நாட்ட பல உத்திகளைக் கையாண்டது திமுக தலைமை. ஆனால், எதிர்பாராமல் நடந்துவிட்ட சில விரும்பத்தகாத சம்பவங்களால் திமுகவின் எண்ணம் ஈடேறவில்லை. இதனால் கொங்கு மண்டலத்தை மீண்டும் தனது கோட்டையாகவே தக்கவைத்திருக்கிறது அதிமுக. என்றபோதும் தங்களைப் புறக்கணித்த கொங்கு மக்களின் நம்பிக்கையை பெறும்வகையில் திமுக தரப்பில் முக்கியமான சில முன்னெடுப்புகளை செய்யப் போகிறார்களாம். அதன் முதல்படியாக, தோல்வியால் துவண்டுகிடக்கும் கொங்கு திமுகவை தூக்கி நிறுத்த உதயநிதி ஸ்டாலின் வசம் கொங்கு மண்டல திமுகவை ஒப்படைக்கப் போகிறார்களாம். கொங்கு திமுகவை கவனித்துக் கொண்டே கொங்கு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செய்து கொடுத்து திமுகவின் செல்வாக்கை உயர்த்துவாராம் உதயா.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்