தமிழகம்

ஆன்லைனில் பதிவு செய்தே குடிநீர் வாங்க வேண்டும்: டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் பி.எஸ் சுந்தரம், செயலர் எஸ்.கேசவராம், பொருளாளர் கே.வி.சுப்பையா ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் தனிப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் சில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தண்ணீர் வாங்கினால், அது சட்டத்துக்குப் புறம்பாக எடுத்து வந்த தண்ணீராகவே கருதப்படுகிறது. அதுகுறித்து தெரியவந்தால், லாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் தண்ணீர் வாங்குபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே, ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் வாங்குபவர் நேரடியாக சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, தண்ணீர் வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர், தண்ணீர் வாங்குவோர் ஆகியோர் தண்டனையிலிருந்து தப்பலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT