தமிழகம்

காய்கறி வியாபாரிகளை போலீஸார் தடுத்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

செய்திப்பிரிவு

காய்கறி வியாபாரிகளை போலீஸார் தடுத்தால், கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் முதல் வரும் 31-ம் தேதி வரை தளர்வுகள் இல்லாதமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், கடைகள் இயங்கவில்லை. இதையொட்டி, மூன்று சக்கர வாகனம், தள்ளுவண்டி உள்ளிட்ட வாகனங்களின் மூலம் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும்போது போலீஸார் தடுப்பதாக, சென்னை மாநகராட்சிக்கு வியாபாரிகள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "மூன்று சக்கர வாகனம், தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினால், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.

SCROLL FOR NEXT