தமிழகம்

பணியின்போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் வெள்ள நிவாரண பணியின்போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த திருவல்லிக்கேணி ராம் நகரைச் சேர்ந்த காந்தா ராவ், கடந்த 11-ம் தேதி மழையால் பாதிக்கப்பட்ட புளியந்தோப்பு பகுதியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த காந்தா ராவ் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT