கரோனா தடுப்பு பணிகளுக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் நிதியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கேவிஎஸ் குழுமம் சார்பில் வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு பணிகளுக்காகவும், தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்திடவும் சாய் லட்சுமி மில்க் புராடக்ட்ஸ், ராஜ ராஜேஸ்வரி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ், நெம்பர்.1 புட் இண்டஸ்ட்ரீஸ், புவனேஸ்வரி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ், சுவாமிஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கே.வி.எஸ் குழுமத்தின் சார்பில் ரூ.51 லட்சம் நிதி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளரும், நெம்பர்.1. புட் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநருமான கேவிஎஸ் சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர்கள். கே.எம் சுப்பிரமணி, கே.எம் சுவாமிநாதன் ஆகியோர் ரூ.51 லட்சத்திற்கான வரைவோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.
அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான டி.செங்குட்டுவன், திமுக சிறுபான்மைப்பிரிவு மாநில இணை செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். கேவிஎஸ் குழுமம் சார்பில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் சில நாட் களுக்கு முன்பு பொதுமக்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் ரூ.30 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.