மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி எழுதிவைத்த உயிலுக்கு புறம்பாக சென்னையில் உள்ள செட்டி நாட்டு அரண்மனையின் சில அறைகளை பூட்டி வைத்திருப்பதாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ.எம்.கடந்த 2-ம் தேதி கால மானார். கடந்த 6-ம் தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அன்றே செட்டிநாடு அரண்மனையில் சில அறைகள் பூட்டப்பட்டதாகவும் அரண்மனை பணியாளர்கள் வெளியேற்றப் பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதையடுத்து, எம்.ஏ.எம்-மின் சுவீகாரப் புதல்வர் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணை யரிடம் புகார் ஒன்றை அளித்தார் ஏ.சி.முத்தையா. புகாரைத் தொடர்ந்து, பூட்டப்பட்ட அறைகள் திறக்கப்பட்டாலும் அரண்மனைப் பணியாளர்கள் யாரும் இன்னும் அங்கே செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஏ.சி.முத்தையா கூறியதாவது: செட்டிநாடு அரண் மனையில் 17.5%எம்.ஏ.எம்முக்கும் 32.5% குமாரராணி மீனா முத்தை யாவுக்கும் அவரது மகன் அண்ணாமலைக்கும் பங்குள்ளது. எஞ்சிய 50% பங்கு செட்டிநாடு தர்ம அறக்கட்டளைக்குச் சொந்த மானது. இந்த அறக்கட்டளையில் எம்.ஏ.எம்-மும் ஐயப்பனும் அறங் காவலர்கள். அண்மையில் மூன்றாவது அறங்காவலராக என்னையும் சேர்த்தார் எம்.ஏ.எம். நான் அறங்காவலராக நீடிப்பதற்கு நீதிமன்றத்தில் ஐயப்பன் இடைக்காலத் தடை பெற்றார்.
இந்நிலையில், எம்.ஏ.எம். உயிருடன் இருக்கும்போதே, ’டாக் டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு தர்ம அறக்கட்டளை’ என்ற புதிய அறக்கட்டளையை நிறுவி, குமாரராணி மீனா முத் தையா, நான், எனது மகன் அஸ்வின் முத்தையா, வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோரை அறங்காவலர்களாக்கினார்.
உண்மை இப்படி இருக்க, ஐயப் பன், அரண்மனை சொத்துக் களை கைப்பற்ற நினைக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு செய்து எம்.ஏ.எம்மின் உயில் பிரகாரம் அரண்மனை சொத்துக் களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.