திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. 
தமிழகம்

திருவண்ணாமலையில் சாதுக்களுக்கு தடுப்பூசி

செய்திப்பிரிவு

ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகா தாரத்துறை சார்பில் சாதுக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நேற்று நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத் தொடங்கி வைத்தார். சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலையில் தங்கி உள்ள வெளிநாட்டினரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

மேலும், அத்தியந்தல், ஆனாய் பிறந்தான், நல்லவன்பாளையம், அடி அண்ணாமலை உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்து வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT