திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு தோல் தொழிற்சாலை சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி இலவசமாக வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணிகளில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு முழு ஊரடங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலைகளில் ரோந்துப்பிரிவு காவலர்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் மொஹீப் குரூப் தோல் தொழிற் சாலை நிறுவனம் சார்பில் அதன்தலைவர் கோட்டை முகமது முஹீப்புல்லா மற்றும் மனிதவள மேம்பாடு மேலாளர் முனவர்ஷரீப் ஆகியோர் ரூ.1 லட்சம் மதிப்பிலான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றை ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் முன்னிலையில் வழங்கினர்.
அப்போது, நகர காவல் ஆய்வாளர் திருமால் உட்பட பலர் இருந்தனர். ஆம்பூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன.