அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: கோப்புப்படம் 
தமிழகம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்

செய்திப்பிரிவு

ஊரடங்கில் தளர்வுகள் வரும்போது அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னையில் இன்று (மே 24) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது நடைபெறும் எனவும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "பிளஸ் 1 மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசித்துள்ளோம். கூட்டம் கூட்டமாக மாணவர்களோ, பெற்றோர்களோ பள்ளிக்கு வரக்கூடாது, ஆன்லைனில்தான் எல்லாம் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

மாணவர் சேர்க்கை குறித்து தேதியெல்லாம் முடிவு செய்திருந்தோம். ஆனால், ஊரடங்கு காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. முழு கவனமும் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில்தான் இருக்கிறது. ஊரடங்கு தளர்வு வரும்போது சேர்க்கைகள் நடைபெறும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT