சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிந்தாதிரிபேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி.
இதற்காக இன்று காலை 10.45 மணிக்கு கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்ட கருணாநிதி முதலில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நெடுஞ்செழியன் நகர் மக்களை சந்தித்தார்.
அங்கு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்
பின்னர் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகேயும் கோட்டூர்புரம் பாலம் அருகேயும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அங்கும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், பகுதிச் செயலாளர் மதன்மோகன், துணை செயலாளர் சிதம்பரம், ஜெகதீசன், பிரபாகர், மாரி உள்பட ஏராளமான நிர்வாகிகள் நிவாரண உதவிப் பொருட்களை வழங்கும் பணியை மேற்கொண்டனர்.