கோப்புப்படம் 
தமிழகம்

தருமபுரியில் நாளை தற்காலிக செவிலியர் பணிக்கு நேர்காணல்

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்காணல் நாளை (25-ம் தேதி) தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும் கரோனா பராமரிப்பு மையங்களுக்கும் சிகிச்சை பெற வருகின்றனர். எனவே, கூடுதலாக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தேவைப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தகுதியுடைய செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள் ஆகியோர் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப் பிரிவில் கரோனா தொற்று தொடர்பான பணிகளில் ஈடுபட தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.

இதற்கான நேர்காணல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை (25-ம் தேதி) நடக்க உள்ளது. செவிலியர் பணிக்கு டிஜிஎன்எம் அல்லது பிஎஸ்சி நர்சிங் கல்வித் தகுதி கொண்டவர்கள் நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் நேர்காணலில் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

இதைத்தொடர்ந்து நடக்கும் ஆய்வக நுட்புநர் பணிக்கு சிஎம்எல்டி அல்லது டிஎம்எல்டி கல்வித்தகுதி உடையவர்கள் உரிய சான்றிதழ்களுடன்பங்கேற்று பயன்பெற லாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT