வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி நேற்று சென்னை வந்திருந்தார். வெள்ளத்தால் பாதிக் கப்பட்டு குப்பைகள் சூழ்ந்திருந்த தரமணிக்கு நேற்று காலை சென்ற சீதாரம் யெச்சூரி, அங்கு பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகி களோடு இணைந்து குப்பைகளை யும் அகற்றினார்.
இந்த நிகழ்ச்சியின்போது சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட தமிழக மக்களுக்கு மாநில அரசு வழங்கும் நிவாரண நிதி போதுமானது இல்லை. ஆகவே, இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலிருந்தும் நிதி திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் பிரச்சினைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. எனவே, நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தின் தற்போதைய பிரச்சி னைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படும் என்றார்.