கனமழையால் சேதமான சாலைகள் மற்றும் சிறுபாலங்களைத் தற்காலிக மாக சீரமைக்க தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும் சிறுபாலங் களைத் தற்காலிகமாக சீரமைக்க தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.12 கோடியும், சென்னை மாவட்டத்துக்கு ரூ.6 கோடியும், மேலும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள இதர 8 மாவட்டங்களில் உடனடி சீரமைப்புக்காக ரூ.8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள சேதப் பணிகளை துரிதப்படுத்தி சீரமைக்க விதி முறைகள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக பணிகளை போர்க் கால அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்டு 30 நாட்களுக்கு முடிக்கவும், திருவள்ளூர் மாவட் டத்தில் பழுதடைந்த 4 பெரிய பாலங்களை (திருத்தணி நாகலாபுரம், கனகம்மாசத்திரம் தக்கோலம், கொரட்டூர் தின்னனூர் - பெரிய பாளையம், காஞ்சிபுரம் - வந்தவாசி) சீரமைக்கும் பணியை 45 நாட்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் இரும்புலிச்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி இன்று முடிவடையும். சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இதுவரையில் 570 கி.மீ. சாலைகளில் தற்காலிக வெள்ள சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.