தமிழகம்

புதுச்சேரியில் கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 81.04 சதவீதமாக உயர்வு; இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சம்: ஒரேநாளில் 34 பேர் பலி

செ.ஞானபிரகாஷ்

கரோனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் புதுச்சேரியில் 81.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சமாக இருந்தது. இன்று 34 பேர் பலியானார்கள்.

புதுச்சேரியில் கரோனா தொற்று வேகம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதிதாக 9037 பேரை பரிசோதித்ததில் இன்று புதிதாக 1448 பேருக்கு தொற்று உறுதியானது. அதேநேரத்தில் கரோனாத்தொற்றிலிருந்து இன்று 1903 பேர் விடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் தொற்றிலிருந்து குணமடைவோர் சதவீதம் 91ல் இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து மே இரண்டாவது வாரத்தில் 77 ஆக சரிந்தது. தற்போது இச்சதவீதம் அதிகரித்து வருகிறது. குணமடைவோர் சதவீதம் இன்று 81.04 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து புதுச்சேரியில் உச்சத்தில் உள்ளது. இன்று 34 பேர் உயிரிழந்ததால், இதுவரை தொற்றுக்கு 1359 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி முழுக்க தற்போது 2026 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் 14 825 பேரும் என மொத்தம் 16851 பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளனர்.

SCROLL FOR NEXT