நாளை முதல் தளர்வு இல்லாத ஊரடங்கு அமலாவதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வாகனங்கள். 
தமிழகம்

தளர்வு இல்லாத ஊரடங்கு அமலாவதால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

செய்திப்பிரிவு

நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பல்வேறு வாகனங்களில் தங்கள் சொந்தஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் என தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போலீஸார் அனுமதி மறுத்ததால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில வாகனங்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து அனுப்புகின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக சுங்கச்சாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக செல்கின்றனர்.

SCROLL FOR NEXT