தமிழகம்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பொறியியல் முதல் பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

வெள்ளம் பாதித்த மாவட்டங் களில் பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் வரும் 28-ம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அப்துல் கலாம் விஷன் இந்தியா டிரஸ்ட் அறங்காவலரும், வழக்கறிஞருமான எஸ்.குமார், உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு ஆஜராகி கூறியதாவது:

மழை வெள்ளத்தில் மாணவர் களும் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். பாடப் புத்தகம், நோட்டு, கம்ப்யூட்டர், ஹால்டிக்கெட் போன்றவை சேதமடைந்துவிட்டன. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்தார். மாணவர்கள் போராட் டத்தையடுத்து 16, 18-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகவும், மறுதேதி பிறகு வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்தார்.

அடுத்த 3 மணி நேரத்தில் அவரே மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார். அதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாண வர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். முடியாதபட்சத்தில், இத்தேர்வு களை அடுத்த பருவத்தேர்வில் எழுதலாம். அதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைக் கல்லூரிகளுக்கு ஜனவரி யில்தான் தேர்வு தொடங்குகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கும் என அறி வித்திருப்பது சட்டவிரோதமானது. எனவே பி.இ., பி.டெக், பி.ஆர்க் தேர்வு அட்டவணைக்கு தடை விதிக்க வேண்டும். ஜனவரியில் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கோரினார்.

இது தொடர்பாக தகவல் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞ ருக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் உத்தரவிட்டார். அதன்பின்னர் தலைமை நீதிபதி அமர்வு முன்பு அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் டிசம்பர் 28-ம் தேதி தேர்வு தொடங்கும். மற்ற கல்லூரிகளில் ஏற்கெனவே அறிவித்த தேதியில் தேர்வுகள் நடைபெறும். அண்ணா பல்கலைக் கழக துறை கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம் பேட்டை எம்ஐடி, அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கான தேர்வு ஜனவரியில் தொடங்குகிறது’ என்று தெரிவித்தார்.

இந்த தகவல்களை உடனடியாக அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அதன் விவரங்களை நாளை (இன்று) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இணையதளத்தில் அட்டவணை

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் நீங்கலாக இதர மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி (இன்று) தொடங்கும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் ஆகிய மாவட்டங் களில் உள்ள 148 பொறியியல் கல் லூரிகளைச் சேர்ந்த மாணவர் களுக்கான அனைத்து செமஸ் டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப் படுகின்றன. அவர்களுக்கு தனி யாக தேர்வுகள் நடத்தப்படும். புதிய தேர்வு காலஅட்டவணை பல்கலைக் கழக இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT