அரசு கேபிள் டிவி தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு கேபிள் டிவி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அவர் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத் தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ம.க. வழக் கறிஞர்கள் பாலு, ஜோதிமணியன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “இந்த வழக்கு அரசி யல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி கழகத் தலைவர் கூறியுள்ளது போல எந்த அவதூறு வார்த்தை களையும் தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிடவில்லை. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம் ராமதாசுக்கு சம்மன் அனுப்பி, விசாரணையை வரும் ஜன.4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. எனவே இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, வழக்கு விசாரணைக்கு ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார். வழக்கு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.