ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் 1,200 காலியிடங்களை நிரப்பும் வகையில் மெயின் தேர்வு நாடு முழுவதும் 153 மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் தேர்வெழுதுகிறார்கள். தமிழகத்தில் சென்னை மட்டுமே தேர்வு மையம் ஆகும். அண்ணா சாலை அருகேயுள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரி மையத்தில் 855 பேர் தேர்வெழுதுகிறார்கள்.
முதல் நாள் அன்று காலையில் கட்டுரை தாள் தேர்வும், பிற்பகல் ஆங்கில தேர்வும் நடக்கிறது. தொடர்ந்து, பொது அறிவு தேர்வுகளும், மொழித்தாள் தேர்வுகளும், கடைசி நாளான 23-ம் தேதி விருப்ப பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன.