தமிழகம்

காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கல்

செய்திப்பிரிவு

வேலூர் மத்திய மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கப் பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மேல்விஷாரத் தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் அப்துல் சுக்கூர் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். பின்னர், கோவிட் உதவி மையத்தை தொடங்கி வைத்ததுடன் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சார வாகனத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.ஓ.நிஷாத் அஹ்மத் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பேரணாம்பட்டு

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து, பொதுமக்க ளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் விஜய் பாபு உள் ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசத்தை மாவட்டத் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

மேலும், சேத்துப்பட்டு பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முகக்கவசம் மற்றும் கரோனா கிட் ஆகியவற்றை வழங்கினார். இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பழகன், தசரதன், நகரத் தலைவர் ஜாபர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள், கரோனா முன்களப்பணியாளர்களுக்கு ஆயிரம் கையுறை, 3 ஆயிரம் முகக்கவசம், கிருமி நாசினி நேற்று வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 3 ஆயிரம் முகக்கவசம், தொண்டு நிறுவனங் களுக்கு 3 ஆயிரம் முகக் கவசம் என மொத்தமாக 10 ஆயிரம் முகக்கவசங்களை திருப்பத்தூர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் கவுன்சிலருமான பரத் வழங் கினார். அப்போது, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேகானந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

ஆம்பூர்

அதேபோல், ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஆம்பூர் அடுத்த மின்னூர் இந்திரா காந்தி திடலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சங்கரன், தோல் தொழிற்சாலையில் பணி யாற்றி வரும் தொழிலாளர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT