தமிழகம்

ஊரங்கு நீட்டிப்பு குறித்து நாளை ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி 

ஜெ.ஞானசேகர்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் நாளை விவாதித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்ஐடி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கைப் பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

''தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 9 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான மருந்து உள்ளது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் நாளை காலை மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்து உரிய முடிவு அறிவிக்கப்படும்.

கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 3-ம் தேதிக்குள் 2-வது தவணை தொகை வழங்கப்பட்டுவிடும். அரசின் முழு கவனமும் தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளது''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT